பக்கம் எண் :

118கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3

18. பாரதியார்

நேரிசை வெண்பா

*முருகா! முதல்வா! முத்தமிழில் நெஞ்சை
உருகவைக்கும் மாணவர்காள்! உண்மை - மருவியநல்
ஞானஞ்சேர் ஆசிரிய நல்லோரே என்கவியை
நானுஞ்சொல் கின்றேன் நயந்து

எண்சீர் விருத்தம்

தமிழ் வாழ்த்து

கவிதைஎனுங் காதலிபால் உன்னைப் பெற்றேன்
    கண்ணம்மா! தமிழ்மகளே! முத்த மிட்டேன்
கவிவெறியோ கள்வெறியோ அறிய கில்லேன்
    கனவுலகில் பறக்கின்றேன் தரையில் நில்லேன்;
செவிபொருந்தும் விழிகண்ணீர் சிந்தக் காணின்
    செங்குருதி பீறிட்டென் னெஞ்சிற் கொட்டும்
புவிபுகழும் நீகலங்கப் பார்த்து நில்லேன்
    போர்தொடுப்பேன் உனைக்காப்பேன் வாழ்த்தி நிற்பேன்

கலிவெண்பா

முன்னுரை

நாடி வருவோர்க்கு நற்கல்வி ஊட்டுதற்குக்
கூடி வருமுணர்வால் கோவில் இடமெல்லாம்


*முருகா - கல்லூரி முதல்வர் முருகையன்