12 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3 |
கனவில் கம்பன் எனுமெண்ணம் அலையலையாய் நெஞ்சில் ஓட, இரண்டொன்று பாடல்களை என்வாய் பாடத் தனிநின்று வானரங்கில் திங்கள் என்பாள் தானாடக் கண்ணிமையில் உறக்கம் ஆட, மனம்நின்று செயல்நின்று கண்ண யர்ந்தேன் மறைந்துவிட்ட கம்பனங்கு வந்து நின்றான் கனவென்று நானறியேன் வணக்கம் என்றேன் “கருதியது யா” தென்று முறுவல் பூத்தான்*(3) ஆடவரைப் பாடென்றார் வழியைக் காணேன் அரிவையரைப் பாடென்றால் நூறு நூறு பாடல்வரும்; என்செய்வேன்? என்றேன்; “தம்பீ பாடுதற்கு வழிசொல்வேன் என்னு டன்வா தேடிவரும் பாடல்கள்தாம்” என்றான் கம்பன் தித்திக்கும் சொல்கேட்டேன் உடன்பா டென்றேன்; மாடிவிடுத் தகல்வானில் பறந்து சென்றோம் “வளம்சேரும் அயோத்திநகர் இதுகாண்” என்றான்(4) கலிவெண்பா தயரதன் “திசையெல்லாம் தேரோட்டித் **தெம்முனையில் வேந்தர் இசையெல்லாம் மேலோட்டி ஈடின்றித் தானாண்டான் பட்டத் தரசியரும் பாவையரும் எத்துணையோ கட்டிக் களித்தான் கணக்கில்லை மற்றவையும் சீருண்டு செல்வம் மிகவுண்டு பல்வளஞ்சேர் பாருண்டு மேலும் பலவுண்டாம் ஆனாலும் ஓடி விளையாட, உண்ணும் பொழுதிருந்(து) ஆடிக் கலத்துணவுள் அங்கை துழவுதற்கு, வேய்ங்குழலைத் தோற்கடிக்கும் வெள்ளை மழலைமொழி
*முறுவல் - புன்சிரிப்பு **தெம்முனை - பகைக்களம் |