கவியரங்கில் முடியரசன் | 121 |
சென்னை நகர்க்குச் சிலர்கொண்டு சென்றார்கள்; நன்னீரா வார்த்தார்கள்? நாளும் திருக்கூவப் புன்னீரால் பூசை புரிந்தார்கள்; ஆனாலும் *முன்னீர்மை போகவில்லை மும்மடங்காக் கண்டதனால் ஆங்கிலத்தார் கண்பார்வை அவ்வாழை மேற்படலால் தீங்குளத்தார் வஞ்சத் திருடர் அறியாமல் பாண்டிப் பதியில் பதித்துக் கடல்நீரை வேண்டி இறைத்திறைத்து வீரச் சுவைமாற்றக் கூடி உழைத்தார்கள்; கூடும் புதுவையில்தான் நாடிவரும் புத்துலக நல்லாசான் நம்ஆசான் ஈடில் புரட்சி எழிற்கவிஞன் என்னுமொரு பாடல் தருவாழை பாருக் களித்ததுவே; பயனும் சுவையும் வாழையிலை காய்கனிபூ பட்டை வளர்தண்டு கீழே யுறுகிழங்கு கேடின்றிப் பயனுறல்போல் பாவல்ல வாழை பயக்கின்ற அத்துணையும் **ஓவின்றி மக்கட் குறுபயனை நல்குவதாம்; காதற் சுவையுண்டு கல்விச் சுவையுண்டு தீதற்ற வீரச் சுவையும் தெரிவதுண்டு பத்திச் சுவையும் பழமை தரும்சுவையும் மெத்தப் புதுமை விரும்பும் சுவையும்
*முன்னீர்மை - முன்னையியல்பு **ஓவின்றி - நீங்காது |