122 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3 |
புரட்சிச் சுவையும் புகுந்தபகை வர்க்கு மருட்சிச் சுவையும் வழங்குவது நம்வாழை; சுவைகாணார் சாதிச் சழக்காலே சாப்பிடுவோர், மேலுலகம் ஓதிப் பிழைப்பவர்கள், ஓரா யிரந்தெய்வம் உண்டென் றலைந்திடுவோர், ஊரேய்த்து வாழ்ந்திடுவோர் உண்டாற் சுவைநல்கா திவ்வாழை உண்மையிது; அகப்பகைவர் பாரதியின் பேர்சொல்லிப் பாங்குபெறும் நல்லன்பர் வீரமிகு பாடல்களை வெட்டிவிட்டுக் காட்டுகின்றார்; சூரன் முகத்திற் சுருண்டுவளர் மீசைதனில் ஓரங் குறைத்தால் உருவமது பாரதியோ? தாள்குறைத்து மேல்குறைத்துத் தண்டொன்றே கைப்பற்றி ஆள்பிடித்து வாழைஎன ஆர்க்கின்றார் சூதுடையார்; பாரதி வந்தான் வீர உருக்குறைத்து வேடிக்கை காட்டுகின்ற பேரின் செருக்கொழிந்து தீயாதோ? என்றேன் நான்; ‘தீயுமடா! தீயுமடா! தீப்பகைவர் தற்செருக்கு; நீயுமெழு! நீயுமெழு! நேர்நின்று போர்தொடுப்பாய்’ என்ற வுரைகேட்டேன் ஏறனைய பாரதியும் ஒன்றி எனதுமனத் துள்ளே நகைத்துநின்றான்; கானத்து வாழ்புலியாய்க், கத்துபுனல் நீந்திவரும் மீனத்தில் நற்கயலாய், மேல்நோக்கிப் பாய்கின்ற |