பக்கம் எண் :

124கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3

தென்னாடென் றுரைத்தாலோ ஒன்று பட்ட
    தேயத்தைப் பிரிக்கின்ற உணர்ச்சி யென்பார்;

எந்நாளும் தமிழரெனும் உணர்ச்சி யின்றி
    இருப்பவரே பாரதத்தின் புதல்வர் என்பார்

உன்னாட்டில் தமிழாட்சி கொடுத்து விட்டோம்
    உயர்கலைகள் தமிழ்மொழியில் உண்டா? என்று

தென்னாட்டை உணராதார் கேட்பர்; உண்டு;
    தீக்கிரையாய்ப் போனதுண்டு; நெஞ்சை யள்ளும்

பொன்னேட்டைத் தின்றொழித்த நெருப்பும் சொல்லும்
    போகட்டும்; புதுக்கலைகள் செய்து காட்டும்

முன்னேற்றம் தமிழிலுண்டு; நேற்று வந்த
    மொழியாளர் கேட்பதெனில் விந்தை தம்பி!

மெத்தவளர் புதுக்கலைகள் தமிழிற் செய்து
    மேன்மைபெற வேண்டுமென்று பாடி நின்றேன்;

செத்தமொழி சுமப்பதற்கு நாடு கின்றீர்!
    செந்தமிழை வாழ்மொழியைச் சாக டிக்கப்

பித்தரெனப் பிதற்றுகின்றீர்! நன்றோ? சொல்வீர்!
    பிறனாட்சி தொலைந்துவிடின் தமிழின் மாட்சி

எத்திசையும் பரவிவரும் என்றி ருந்தேன்;
    இகழ்ச்சிக்கோ போர்ப்பாட்டுப் பாடி வைத்தேன்?

கலைமலிந்த தமிழ்நாட்டில் வணங்கு தற்குக்
    கடவுளர்தாம் ஆயிரம்பேர்; அவர்கட் கெல்லாம்

பலமனைவி; இவரன்றி வேறு பக்கம்
    படையெடுப்பும் நடப்பதுண்டு; மக்கள் உண்டு;