பக்கம் எண் :

தமிழ் முழக்கம்135

சீர்கெட்டுப் பாடித் திருட்டுக் கவிபாடிப்
பேர்கெட்டுப் போனாலும் பேர்கவிஞன் என்றுரைத்துப்50
பாட்டுத் தளையறுத்துப் பாடிவரின் கூத்தனதைக்
கேட்டுத் தலையறுத்தான் என்று கிளந்திடுவர்;
பாட்டுத் திறமறியாப் பாவலரைச் சீறியெழுந்
தோட்டுந் திறலுடையான் ஒட்டக்கூத் தன்பாவால்
வெற்றுக் கவியென்று வெட்டியும் பாடிடுவான்
உற்ற உயர்கவியென் றொட்டியும் பாடிடுவான்
வெட்டியும் ஒட்டியும் வேண்டும் படியுரைத்த
ஒட்டக்கூத் தன்பாட்டில் ஒட்டிவருங் காரிகையே,
பண்டைநாள் தொட்டுப் பகையாக வந்தவற்றைக்
கண்டு கலங்காமற் கண்டாய் களம்பலவும்60
சென்றகள மெல்லாம் செயங்கொண்டாய் ஆதலினால்
இன்றும் பரணிபல ஏற்றுவரும் போர்முரசே,
தென்மலையில் தோன்றித் திரிகூட ராசன்றன்
சொன்மிடையும் பாட்டொலியிற் சொக்குகுற வஞ்சியே,
‘எல்லா மதங்களுமுண் டென்றாலும் ஓர்பகையும்
அல்லா மதமொன்றே ஆக்கிடுக மானிடமே,
கூறாய்ப் பிரியல்’ எனக் கூறியிங்கு யாவரையும்
சீறா நலங்கொண்டு சேர்த்தணைக்குஞ் செந்தமிழே,
‘சாதி சமயமென்று சண்டையிட்டு மாயாதீர்
சோதி வடிவொன்றே தூய இறை’என்று70
வள்ளலருட் பாவில் வடித்தெடுத்த தேன்சுவையே,
உள்ளம் உருக்கி உணர்விக்குந் தெள்ளமுதே,
என்று புகழ்பாடி என்னம்மை தாள்பணிந்தேன்
நின்று முகமலர்ந்தாள் நீள்விழியில் நீர்துளித்தாள்;
‘பாடு மகனேநீ பாடடா என்புகழை,
நீடுதுயில் நீங்கி நிமிர்ந்தெழுந்து பாடடா;