138 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3 |
வாட்டியதைப் புண்படுத்தும் வாடிக்கைக் காகமெனப் புண்படுத்த ஆசைகொளும் புன்செயலை விட்டுவிடு, பண்படுத்தப் பாடிப் பழகிப் பறந்துதிரி,140 வான வெளியெங்கும் வட்டமிட்டு வட்டமிட்டே ஆன அமைதிக் கடையாள வெண்புறவாய் நாளும் பறந்துதிரி, நாட்டில் நலம்பெருகத் தோளை உயர்த்தித் துணிந்தே பறந்துதிரி, காலைக் கதிரவனைக் கண்டபினும் தூங்காதே, சோலைக் குயிலாகிச் சுற்றிப் பறந்துதிரி; கூவிப் பறந்திடடா கொள்கையைப் பாடிடடா தாவிக் குதித்திடடா’ என்றாள் தமிழன்னை; நாடிச் சிறகடித்து நாட்டின் நிலையுயரப் பாடித் திரிந்தேன் பறந்து.150 திருவள்ளுவர், அவ்வை, இளங்கோ, சாத்தனார், திருத்தக்கதேவர், கம்பர், புகழேந்தி, ஒட்டக்கூத்தர், செயங்கொண்டார், திரிகூடராசப்பக் கவிராயர், உமறுப்புலவர், இராமலிங்க வள்ளலார் - இவர்களைப் பற்றிப் பாடிப் பன்னிருவர் அரங்கேறினர். உலகத்தமிழ் மாநாடு சென்னை 6.1.1968 |