14 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3 |
நேரிசை ஆசிரியப்பா பரசுராமன் திருமண மாகித் திரும்புங் காலை நெறியில் ஒருவன் நின்று மறித்தனன் பொறிபடு விழியன் பூணூல் மார்பன் தவவடி வுடையன் தருக்கும் கொண்டோன் பவவினை அறுக்கப் பரமனை நாளும் நினைவோன் கையில் நீண்ட வில்லினன் அனையோன் மணவினை ஆர்ந்த குமரனை அணுகினன் இடியென ஆர்த்தனன் “இளையோய்! ஓட்டை வில்லை ஒடித்தனை! என்கை காட்டும் வில்லை வளைத்திடு காண்போம்” கேட்டோர் நடுங்க நீட்டினன் வில்லை; அன்பும் பணிவும் அரும்பிய நகையுடன் முன்புற நின்றவன் மூரிவில் வாங்கி வளைத்தனன் அதனை; வளைந்த(து) ஆணவம் களைத்தனன் துறவி கடுமொழி துறந்தான் சினமும் தொலைந்தது சிறியவன் முன்னே மனவலி குன்றி மரமென நின்றான்; அருளும் தவமும் ஆண்டவன் வரமும் பொருளும் புகழும் பிறவும் பெறினும் செருக்கும் தருக்கும் சேரின் ஒறுக்கும் ஒறுக்கும் உண்மை அறமே.(9) கலித்துறை குகனும் பரதனும் ஓடு புனற்கிடை ஓடம் விடுத்திடும் ஆழ்கங்கை வேடர் களுக்கிடை வீரம் நிறைந்திடும் வில்லாளன்‡
பவவினை - பிறவிக்குக் காரணமாகிய வினை *குமரன் - இராமன் மூரிவில் - வலிய வில் *ஒறுக்கும் - தண்டிக்கும் ‡வில்லாளன் - குகன் |