நாடு கொடுத்திடும் நாயகன் என்றிவர் தோழமையால் மூட மதிப்படு சாதி தொலைத்தனர் முன்னின்றார்(10) கண்டு மகிழ்ந்தனம்; காவி யுடுத்தோர் இளைஞன்*போர் கொண்டு நெருங்கினன் என்ன விரைந்தனன்; கோளரி**போல் மண்டி எழுந்தனன் “மாய்த்திடு வேனவன் மார்பினையே ***விண்டுயிர் போக்குவென்” என்று முழங்கினன் வேடுவர்கோன்(11) நெஞ்சு பொருந்திடும் நேய மிகுந்தவன் அவ்விளையோன் சஞ்சலம் ஓருரு வாகிய தோஎனச் சார்ந்திடலும் ****செஞ்சர வேடுவன் சிந்தை கலங்கினன் செய்தியுணர்ந்(து) ‡“அஞ்சன வண்ணர்கள் ஆயிரர் நின்னிகர் ஆவாரோ?”(12) < என்றனன்; “அண்ணலும் யாண்டுளன்” என்றான் வருமிளையோன்; குன்றன தோளன் கொடியிடை யாளுடன் வாழுமிடம் சென்றனன்; மூத்தோன் சிறியவ னைக்கண் டருள்பொழியச் “சென்றுநம் நாட்டினில் நாட்டிடு செங்கோல்” எனமொழிந்தான்(13) “மண்ணாள் அரசொரு மங்கையின் சொல்லால் முறைகொன்றான்; அண்ணா! அருளுடன் ஆண்டிட வேண்டும்; அறமொன்றே கண்ணா நினைந்திடும் கண்ணிய னேநின் அரசுரிமை நண்ணேன் அரசியல் நாயக” என்றனன் அவ்விளையோன்(14) அறுசீர் விருத்தம் கண்டனன் *புளிஞர் வேந்தன் கண்களில் நீர்சொ ரிந்தான்; “மண்தனில் அரசுக் காக மாள்கிறார் உடன்பி றந்தார்;
*இளைஞன் - பரதன், **கோளரி - சிங்கம், ***விண்டு - பிளந்து ****சரம் - அம்பு, ‡அஞ்சன வண்ணர் - இராமர் ¶இப்பாடல் பரதன், இராமனை நோக்கிக் கூறுவதாயினும் அக்காலச் சூழலில் மற்றொரு பொருளையும் சுட்டுவது காண்க. *புளிஞர் - வேடர் |