பக்கம் எண் :

தமிழ் முழக்கம்143

3. தென்னாட்டுக் கலைகள்

கலிவெண்பா

சீருடைய நுண்கலைகள் சேர்ந்திலங்கும் நாடொன்றே
பேருலகில் நாகரிகம் பெற்றிருக்கும் நாடென்பர்;
ஆயகலை அத்தனையும் அத்தனைக்கும் நூற்பகுப்பும்
தூய நெறிமுறையில் தோற்றுவித்து வாழ்ந்தவர்நாம்;
நல்ல கலைவளர்த்து நாகரிக நாடென்று
சொல்லும் நிலைதன்னைத் தொன்றுமுதல் பெற்றிருந்தோம்;

சிற்பக்கலை

கல்லெடுத்தான் கைச்சிற் றுளிஎடுத்தான் அக்கல்லில்
சில்லெடுத்தான் நல்ல சிலையொன்று கண்டெடுத்தான்;
கற்பனையில் கண்டெடுத்த காதற் பொருளெல்லாம்
சிற்பமென ஆக்கிச் சிறப்பெடுத்தான் நம்முன்னோன்;10
கல்லைக் கலையாக்கும் கைத்திறனை நீள்கடல்மா
மல்லைக் கருங்குன்றம் மாறின்றிக் கூறிநிற்கும்;
தென்மதுரைக் கோவிலுக்குள் தேர்வடிவக் கல்லெல்லாம்
நன்மதுர மெல்லிசையால் நாளெல்லாம் பாடிநிற்கும்;
விண்ணெட்டும் கோபுரங்கள் விந்தைதரும் நற்சிலைகள்
உண்ணட்ட கற்றூண்கள் ஓங்கும் மதிற்புறங்கள்
ஒவ்வொன்றும் காட்டும் உயிர்ச்சிலைகள் நம்சிற்பச்
செவ்விதனைக் கூறிச் சிறப்பெல்லாம் பேசிநிற்கும்;
தஞ்சைப் பெருவுடையான் தங்கும் தளியதனுள்
நெஞ்சைக் கவரும் நிலையில் நிமிர்ந்திருக்கும்20