பக்கம் எண் :

தமிழ் முழக்கம்147

நெய்தற்கலை

பாலாவி என்றிந்தப் பாரோர் புகழ்ந்தேத்த
நூலாலே ஆடை நொடியிற் படைத்திருந்தோம்;
பாவோ டிழையோடப் பஞ்சாலும் பட்டாலும்
ஓவா துழைத்தே உயர்ந்த கலைகண்டோம்;
நெய்தற் கலையாவும் *நெய்தல் உரிப்பொருளாய்
எய்தாமல் இன்றும் இயக்கி வருகின்றோம்;

இலக்கியக்கலை

கல்லைக் கலையாக்கிக் காடெல்லாம் வீடாக்கிச்
சொல்லிற் சுடரேற்றிச் சொல்லரிய காவியமென்100
றாக்கிப் படைத்தான், அருங்கலைகள் ஆற்றலெலாம்
தேக்கிப் படைத்தான், தெளிதமிழின் பெட்டகம்போல்
காதல் சுவைத்திருக்கக் கண்டான் அகமென்று;
மோதும் பகைக்களத்து மூள்வோர் புறங்கண்டான்
ஓதும் புகழ்சேர் உயர்ந்த புறங்கண்டான்;
தீது சிறிதுமிலாத் தென்னாட்டான் நம்நாட்டான்
ஆயுங் கலைகள் அனைத்தும் பெருக்கிநலம்
தோயும் படிவாழ்வைத் துய்த்திருந்தான்; அவ்வாழ்வு
மீண்டும் தழைக்க வியனுலகம் பாராட்ட
வேண்டுமீ தென்றன் விழைவு.110

அழகப்பர் கலைக்கல்லூரி

காரைக்குடி

28.10.1961


நெய்தல் உரிப்பொருள் - இரங்கல்