148 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3 |
4. பிரிவில் கண்ணகி எண்சீர் விருத்தம் காவிரியின் புகுமுகமாம் பட்டி னத்துள் கார்தவழும் நெடுமாட வீதி ஒன்றில் பூவிரிந்து கொடிபடர்ந்து கோலஞ் செய்யும் புகுவாயில் மாளிகையின் சாள ரத்துத் தாவுமெழிற் கொடியொன்று கொழுகொம் பின்றித் தனியாக அசைந்தாடி நீர்பி லிற்றக் கூவிழந்து குயிலங்கே தேம்பக் கண்டேன் கோலமயில் ஆடாமல் நிற்கக் கண்டேன்.1 மலர்முழுதும் செடிகொடியில் வெதும்பக் கண்டேன் மணம்பரப்பும் அம்மலரைக் கொய்வா ரில்லை; புலர்பொழுதிற் புல்லென்ற முன்றில் கண்டேன் பூங்கொடியார் இடுகின்ற கோலம் இல்லை; பொலிவிழந்து நெடுங்கதவம் நிற்கக் கண்டேன் புதியரென விருந்தயர வருவா ரில்லை; பலவகைய புள்ளினமும் வாடக் கண்டேன் பழந்தந்து பால்தந்து புரப்பா ரில்லை.2 கடலாடை உடுத்தமகள் கதிரோன் என்ற கணவனவற் பிரிந்தமையால் மலர்க்கண் மல்கித் தடநீரைச் சிந்தமருண் மாலை கூடித் தரையெல்லாம் மயக்குறுத்தத், திசைகள் சோர, |