பக்கம் எண் :

தமிழ் முழக்கம்155

செயல்மிகுந்த உணர்ச்சிஎனும் செங்கோல் தாங்கிச்,
    சீரியநற் கற்பனைவெண் குடைமேல் ஓங்கப்
பயன்மிகுந்த கவியுலகை ஆட்சி செய்யும்
    பாவல்ல முடியரசன் கம்பன் ஆவன்.3

பெண்மையுடன் ஆண்மையுமென் றிரண்டும் ஒன்றின்
    பேசுமொரு காதலுக்குச் சிறப்பி ருக்கும்;
வண்மையுள உணர்ச்சியுடன் இலக்க ணத்தின்
    வகைசேரின் பாடலுக்கு மதிப்பி ருக்கும்;
பண்ணலங்கள் நன்குணர்ந்த முந்தை மாந்தர்
    பாடலுக்கு வகுத்துரைத்த வழியீ தாகும்;
கண்ணெனவே அவ்வழியைப் போற்றிக் கம்பன்
    கவிமரபைச் சிதைக்காமல் புகழைப் பெற்றான்.4

பணிசெய்வோம் எமைத்தேர்க என்று நம்முன்
    பணிந்துவரும் வேட்பாளர் வரிசை போல
அணியணியாய்ச் சொல்லெல்லாங் கூடி நின்றே
    அவன்முன்னே தவங்கிடக்கும்; அவற்றில் தேர்ந்து
மணியனைய சொல்லெடுத்துக் கோத்து நல்ல
    மதிப்பேற்றி மெருகேற்றி அணிகள் செய்தான்;
அணிமிகுந்த அவன்பாடல் உலக மெல்லாம்
    அளப்பரிய புகழ்பெற்று வாழக் கண்டோம்.5

விருத்தமெனும் ஒண்பாவால் புகழைப் பெற்றார்
    வேறொருவர் ஈங்கில்லை; கம்பன் பெற்ற
பெருத்தபுகழ் பாரறியும்; வண்ண மெல்லாம்
    பெருங்களிப்பால் கூத்தாடி நிற்கும் பாட்டுத்