156 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3 |
திறத்தைஒரு பழமொழியே அளந்து கூறும்; தென்மொழியான் கம்பன்றன் வீட்டில் கட்டும் சிறுத்தஒரு தறிகூடக் கவிதை யாகச் செப்புமெனில் புகழ்சொல்ல வல்லார் யாரே?6 வில்வளைத்துப் பேராற்றல் விளங்கக் காட்டி மிதிலைதரும் எழிலணங்கை மணந்தான் அண்ணல்; சொல்வளைத்துப் பாவாற்றல் துலங்கக் காட்டிச் சொல்லரிய புகழணங்கை மணந்தான் கம்பன்; மல்விளைக்குந் தோளுடையான் மருங்கு காணா அலைமகட்கு மணவணிநூல் சூட்டி நின்றான்; சொல்விளைக்கும் நாவுடையான் மருங்கு காணும் கலைமகட்குச் சுவையணிநூல் சூட்டி நின்றான்.7 ‘கற்றறிவு கம்பனுக்குச் சிறிதும் இல்லை காளிவந்தாள் அவன்நாவில் எழுதி விட்டாள்’ பற்றுடையார் இவ்வண்ணம் கட்டி விட்டார் பகுத்தறிவுக் கொவ்வாத கதையீ தாகும்; முற்றுணர்ந்த அறிஞனவன், கலைப்ப ரப்பில் மூழ்கிஎழுங் கலைஞனவன், காலங் காணாச் சொற்றமிழிற் கவிஞனவன், நறைப ழுத்த துறைத்தமிழில் தோய்ந்தெழுந்த புலவன் ஆவன்.8 தொடுத்திருக்கும் பழம்பாடற் றொடைகள் தாங்கித் தொன்மைக்கும் தூய்மைக்கும் முதன்மை காட்ட எடுத்திருக்கும் எங்கள்தமிழ்க் கடல்க டந்தான் எல்லையிலாப் புகழடைந்தான்; தென்பு லத்தை |