பக்கம் எண் :

160கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3

பார்த்தலத்தை மூடியபோல் பற்பலரின் மெய்கிடக்கக்
கண்டாள் அவண்கிடந்த கட்டிளமைக் காளையரின்
புண்தாழ் குருதியுடல் ஒவ்வொன்றும் போய்ப்பார்த்தாள்;50
கைவிரல்கள் வேல்பிடிக்கக் கண்ணிமைகள் தாம்மலர
மெய்குருதி நீர்வடிக்க மேலவன்றன் மார்பகத்தே
பாய்ந்ததொரு கூர்வேல் பளிச்சிட்டுத் தானிற்கச்
சாய்ந்ததிரு வாய்மகனைத் தாமரையைப் போல்முகனை
வெற்றிப்புன் மூரலொடு வீழ்ந்து கிடந்தானைப்
பற்றிப் பலமுறையும் பார்த்தாள் விழிமல்க;
ஈன்றெடுத்த ஞான்றையினும் எல்லையிலாப் பேருவகை
ஏன்றுளத்தாற் பூரித்தாள்; எம்மன்னை வாழியரோ!
வெங்கொடுமைச் சாக்காட்டை வீர விளையாட்டென்
றெங்கள்குலம் எண்ணும் இயல்பினது; போர்ப்பரணி60
பாடி மகிழும் பரம்பரையேம்; வாகைமலர்
சூடி வருகின்ற தொல்குடியேம்; ஏந்தியநற்
கைவேல் களிற்றொடு போக்கி வரும்போதும்
மெய்வேல் பறித்தெடுத்து மேலேறிப் பாய்ந்திடுவோம்;
போரில் விழுப்புண் படாஅத நாளெல்லாம்
சீரில்லா நாளென்று செப்புந் திறலுடையேம்;
ஆற்றல் மிகவிருந்தும் அஞ்சாத நெஞ்சிருந்தும்
கூற்றம் எனவெகுளும் கோவேந்தர் ஆண்டிருந்தும்
தூற்றும் படியானோம் தொண்டடிமை யாகிவிட்டோம்
ஏற்றம் தனையிழந்தோம் ஏதிலர்க் காளானோம்;70
வேலில்லை வாளில்லை வெட்டில்லை குத்தில்லை
கோலில்லை கொற்றக் குடையில்லை ஆயினுமே
வந்து புகுந்தவர்கள் வாணிகத்தின் பேர்சொல்லித்
தந்திரத்தால் நம்நாட்டைத் தட்டிப் பறித்தார்கள்;
வெள்ளை மனத்தினர்நாம் வெள்ளை நிறத்தவர்க்குக்