162 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3 |
தானத்த ரானாலும் *தண்டெடுத்துப் போர் முடிப்போம்; காளைப் பருவத்தீர் காய்ந்தெழுதல் நும்கடனாம் நாளைத் திருநாட்டின் நாயகங்கள் நீவிரன்றோ? வீரம் மறவாதீர் வேற்றவர்தாம் நம்நாட்டின் ஓரம் புகுதற்கும் ஒவ்வாதீர், காவலர் நீர்; நீதமிலார் தக்கஒரு நேரமெதிர் பார்க்கின்றார் பேதலித்து நம்முள்ளே பேதம் விளைக்காதீர்;110 செந்நீருங் கண்ணீருஞ் சிந்தி வளர்த்தபயிர் புன்னீர்மை கொண்டோரால் போயொழியப் பார்ப்பதுவோ? நாமிருக்கும் நாடு நமதன்றோ? வேற்றவர்தாம் பூமியினை ஆண்டிருக்கப் புல்லடிமை ஆவதுவோ? ஆளப் பிறந்தவர்கள் ஆளடிமை செய்வதுவோ நாளைப் பிறப்பவர்கள் நம்மையன்றோ தூற்றிடுவர்; வேங்கைப் புலிக்கூட்டம் வீரத் திருக்கூட்டம் நீங்கள் என அறிவேன்; ‘நேரார்தாம் இந்நாட்டில் காலெடுத்து வைத்தால் உடலங்கள் காலாகும்; வாலடக்கி வந்த வழிதிரும்பும்’ என்றுரைத்தால்120 போரெடுத்து வந்திருக்கும் புல்லியர் ஓர்நொடியில் மாரடைத்துச் சாகாரோ? ‘மான மறவர்யாம், எம்முரிமை தீண்டுவரேல் எம்முயிர்கள் வெல்லமல்ல, எம்முனையும் துச்சமென எள்ளி நகைத்திடுவோம்’ என்றெழுக காளையர்காள், ஏது தடைபடைகள்? நன்று புரிந்திடுக நாடு தழைத்திடுக; ஒன்றிவரும் நல்லுணர்வால் உம்பால் உரைக்கின்றேன் நின்று பணி செய்வீர் நிமிர்ந்து. காதர்முகைதீன் கல்லூரி அதிராம்பட்டினம் 5.12.1965
*தண்டெடுத்து - படையெடுத்து |