168 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3 |
வண்டு தமிழ்பாடும் வண்ண மலர்ச்செடிகள், பூத்துக் குலுங்குமெழிற் பூங்கொடிகள் அத்தனையும் பார்த்துச் சிரிப்பேன்; படர்ந்து வருமகிழ்ச்சி140 இன்பக்கண் ணீராய் இலைநுனியில் பூவிதழில் மென்பனித் துளிபோல வீற்றுக் கொலுவிருப்பேன்; பாருலகம் தானியங்கப் பண்ணுதலால் என்பேரை ஆரமிழ்தம் என்றும் அழைத்திடுவர்; இவ்வுலகில் உண்பொருளை உண்டாக்கி உண்பொருளும் நானாவேன்; என்பெருமை இம்மட்டோ? ஏர்முனைநாள் என்னும்நாள் நானில்லை என்றால் நடந்திடுமோ? ஆழ்கடற்கும் கானிலுள புல்லுக்கும் கட்டாயம் என்கருணை வேண்டும் எனவுணர்ந்தே வேதப் பெரும்புலவன் ஆண்டவன்பேர் சொல்லி அடுத்தபடி என்சிறப்பை150 ஓதி மகிழ்ந்தனன்; ஓயாமல் ஆடிவரும் பாதிமதி சூடும் பரமன் சடைமுடிமேல் என்னைஏன் வைத்தான்? எனதருமை கண்டன்றோ! முன்னைத் தமிழ்ச்சுவையில் மூழ்கித் திளைத்தவன்யான் ஏறும் சுவைப்பாட்டின் ஏடுகள் நான்சுவைத்தேன் கூறுமென் சொல்லில் குறையில்லை பொய்யில்லை நான்சுவைத்து விட்டெறிந்த நாலடியார் ஏட்டைத்தான் தேன்சுவைபோல் நீங்கள் தெரிந்தெடுத்துப் பாடுகின்றீர்; மூழ்கி வருவோர்க்கு முத்தளிப்பேன், சிற்சிலகால் ஆழ்கடலில் செம்பவழ ஆரம் அளித்துவப்பேன்;160 ஈந்துவக்கும் என்னீர்மை எல்லாரும் நன்குணர்ந்தும் போந்தொருவர் கஞ்சனெனப் பொய்யில் எனையிகழ்ந்தார்; என்பால், உவர்ப்புண்டாம் யார்க்கும் உதவேனாம் வன்பால் இவருரைத்த வாய்மொழியை நம்பாதீர்; நாச்சுவையோ டுண்பது நான்நல்கும் உப்பன்றோ? பேச்செதற்கு - உப்பிட்ட பேரை இகழ்வதற்கோ? மூவா திருக்க முடியா துயிரிருக்கச் சாவா மருந்தளித்தேன் சார்ந்துவரும் வானவர்க்கு; |