பாலுக்கும் வெண்ணெய்க்கும் பானை திருடிவரும் மாலுக்கு மால்தந்த மாமகளைத் தந்ததன்பின்170 பாலுங் குடியென்றேன் பாலே குடிகொண்டான்; நாலுந் தெரிந்தவன்தான் நாகரிகம் தேர்ந்தவன்தான் பெண்ணெடுத்த வீட்டில் பிரியா திருந்துவிட்டான் புண்படுத்தும் ஓர்சொல் புகன்றறியேன் இன்றுவரை; பிச்சைஎடுத் தெந்நாளும் பித்தன்போல் கூத்தாட்டம் இச்சையுடன் ஆடிவரும் இவ்வாழ்வும் வாழ்வாமோ? என்று வெறுத்தான்போல் ஆலம் எடுத்துண்டான் அன்று துடித்தே அமுதம் பொழிநிலவைக் கொள்ளென் றவற்களித்தேன்; கூறுமிவ் வண்மையால் வள்ளலென் றோத வகையறியார் என்னைஒரு180 கஞ்சனென்றால் சீற்றம் கடுகிவரும்; ஆனாலும் நெஞ்சம் வெறுக்கவிலை நீண்ட பொறுமையினேன்; தண்ணளியால் பார்காக்குந் தக்க பொறுப்புடையேன் விண்வெளியில் செல்வேன் விரைந்து. தியாகராசர் கல்லூரி மதுரைஞு 22.2.1966 |