பக்கம் எண் :

கவியரங்கில் முடியரசன் 17

*கருவரைகள் பலகடந்தோம் கடல்க டந்தோம்
    கண்கவரும் எழில்மாட இலங்கை என்னும்
பெருநகருள் புகுந்தோம்அங் கரண்ம னைக்குள்
    பேசுகின்ற இடிமுழக்கம் கேட்டி ருந்தோம்(18)

கும்பகருணனும் இராவணனும்

“பிறன்பொருளை **வேட்டெழுதல் குற்றம் ஒன்றோ
    பெருமைக்கும் நம்குடிக்கும் பேரி ழுக்காம்
அறன்அன்றாம் மறம்அன்றாம்” என்று ரைத்தான்;
    “அடகும்ப கருணாஎன் உடன்பி றந்தும்
திறனின்னும் அறிந்திலையே! சீசீ போபோ
    ***தெவ்வருடன் நீயும்போ! இன்றேல் ஓடி
உறங்கிடுபோ!” எனக்கனன்று சிரித்தான் வேந்தன்
    உளம்நடுங்கி உடல்நடுங்கி வியர்வி யர்த்தேன்;(19)

“அஞ்சேன்; உன் பகைவர்தமை நண்ணேன்; நீதான்
    பிழைசெய்தாய்; அண்ணனென இடித்து ரைத்தேன்;
செஞ்சோற்றுக் கடன் கழிப்பேன்; சேரார் தம்மைச்
    சேர்ந்துளவு சொலமாட்டேன் வேந்தே! இன்றே
வெஞ்சேனை கொண்டெழுவேன் யானோர் வீரன்
    வீணனலேன்” என்றெழுந்தான்; என்றன் தோள்கள்
நெஞ்சேறி நிமிர்ந்தனவே! வீரங் கொண்டான்
    நெறிதவறான் நன்றியுளான் வாழ்க வென்றேன்;(20)

நிலைமண்டில ஆசிரியப்பா

கனவு கலைந்தது

“பார்த்தனை தம்பி பற்பல ஆடவர்
சேர்த்திடு நெஞ்சில் செந்நெறி ஒன்றே


*கருவரை - கரியமலை, **வேட்டு - விரும்பி, ***தெவ்வர் - பகைவர்