பக்கம் எண் :

172கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3

வாடுகின்ற முல்லைக்குத் தேர்கொ டுத்த
    வள்ளன்மைக் குணமுடையோன், வாழ்வு வேண்டிப்
பாடுகின்ற எம்மவரைக் காவா திங்கே
    பார்த்திருத்தல் செய்வானோ? வானில் ஒன்றாய்க்
கூடுகின்ற முகிலுக்கும் வண்மை சொல்லிக்
    கொடுத்திருந்த பாரியின்றன் புகழை நெஞ்சாற்
பாடுகின்ற பாடலுக்குப் பொருள்சி றக்கும்
    பாவலர்தம் வாழ்வுக்கும் வழிபி றக்கும்.7

பாவலர்க்கும் மற்றவர்க்கும் நெஞ்சு வந்து
    பாரிவள்ளல் தனக்குரிய முந்நூ றூரும்
நாவலர்கள் புகழ்ந்துரைக்கக் கொடுத்து யர்ந்தான்
    நல்லவன்பேர் வாழியவே! தமிழ ணங்கின் சேவடிக்கே

தொண்டுசெயும் அடிகள் என்னைச்
    சீராட்டிப் பொன்னாடை சூட்டி வாழ்த்திப்
பாவுலகக் கவியரசென் றொருபேர் தந்தார்
    பரிவுளத்தை வணங்குகின்றேன் வாழ்க நன்றே.8

பறம்புமலையில்

30.4.1966-இல் நடைபெற்ற பாரிவிழாவில்

தவத்திரு குன்றக்குடி அடிகளார், ‘கவியரசு’ என்ற விருது

வழங்கப் பாடியது.)