176 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3 |
பெயர்க்காரணம் செம்பொற் சிலம்பால் சிறந்து விளங்குவதால் நம்புஞ் சிலப்பதி காரப்பேர் நண்ணுமென்றே செந்தமிழ்க்கோர் ஆரமெனச் செப்புந் திருநூற்கு வந்தபெயர்க் காரணத்தை வல்லார் நவின்றிடுவர்; கோப்பெருந் தேவி, குளிர்முத்தை உள்ளிட்டு யாப்பமைத்துக் காலில் அணிந்த சிலம்பொன்றாம்;80 கண்ணகி நல்லாள்தன் காலில் அணிந்திருந்த பண்ணுறுநல் மாணிக்கப் பைம்பொற் சிலம்பொன்றாம்; எந்தச் சிலம்பால் எழிற்பெயரைப் பெற்றதென வந்ததோர் ஐயம் வளர்ந்து வளர்ந்துவரச் சிந்தை கலங்கித் தெளிவின்றி நானிருந்தேன்; முந்தை மொழிப்புலவன் முன்னேற்றப் பாவேந்தன் எந்தைக்குத் தந்தைஎனும் என்பாட்டன் பாரதிதன் தந்தஒரு பாடல் தரும்விளக்கம் கண்டுணர்ந்தேன்; தேருஞ் சிலப்பதி காரமென் றோர்மணி* ஆரம் படைத்ததமிழ் நாடென் றடிபடைத்தான்90 அந்த மணிமொழியால் அன்னை மணிச்சிலம்பே தந்தபெயர் ஈதென்று சிந்தை தெளிந்திருந்தேன்;
பெண்மை பேணும் நூல் மங்கல வாழ்த்து மகிழ்ந்துரைத்த பேராசான் திங்களை முன்போற்றிச் செய்யகதிர் ஞாயிற்றைப் பின்போற்றிச் செல்கின்ற பெற்றிமையை நாம்சுவைப்போம்; பெண்போற்றும் காரணத்தால் பேசுகிறார் இவ்வண்ணம்; கண்ணகியுங் கோவலனுங் காதல் மணங்கொண்டு பண்ணமைந்த கட்டில் பயில்கின்ற காலைஅக் காட்சி கதிர்ஒருங்கு காண இருந்ததுபோல்
*மணி - மாணிக்கம். |