பக்கம் எண் :

178கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3

ஈண்டுபுகழ் வாழ்த்தொன் றியம்பாத காரணமென்?
குற்றமற்ற கோவலனைக் கோலேந்தும் பாண்டியன்தான்
பற்றித் திருடனென வெட்டிக் கொலைசெய்து
கண்ணகிக்கு மாறாத கண்ணீர் விளைவித்த
பெண்பழிக்கு நாணித்தான் பேசா திருந்தனரோ?130
கற்புடைய பெண்மகளைக் காணுங் கடவுளெனப்
பொற்புடனே ஓர்சிலையாப் பூசித்துக் கற்கோவில்
ஆக்கிப் படைத்த அருந்திறலோன் சேரனுக்குத்
தேக்குபுகழ் மங்கலமே செப்பாத தென்கருதி?
தன்னாட்டான் ஓர் வயிற்றுள் தன்னோடு டுடன்பிறந்தான்
முன்காட்டும் இந்த முறைமையினால் கூசினரோ?
பாடி யிருந்தொருகால் தேடி யலைவோர்க்குக்
கூடி யடையாமல் ஓடி ஒளிந்ததுவோ?
ஆரே அறிவார் அதனுண்மைக் காரணத்தை!
நேரே சிலம்பில் நினைவைப் பதியவைத்140
தின்னும் நுணுகி அணுகுங்கால் எத்துணையோ
பொன்னும் மணியும் புதிதுபுதி தாப்பெறலாம்
கூடும் நலமனைத்தும் கூர்ந்துணர்வீர் நம்மிளங்கோ
பாடுஞ் சிலம்பைப் படித்து.

கண்ணகி விழா

திருச்செங்கோடு

25.5.1966