192 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3 |
நாடெல்லாம் வாழ நனிதுயரம் நான்பெற்றேன் பாடெல்லாம் நான்வாழப் பட்டான் உழவன்மகன் ஆனால் அவன்வாழ யாரே நினைக்கின்றார்? மேனாள் முதலாக மேழித் தொழிலுக்கும் அத்தொழிலை ஆற்றும் அருமை உழவர்க்கும் மெத்த புகழுண்டு மேன்மையுண்டு பாட்டினிலே நாட்டினிலே மாறாய் நடப்பதைத்தான் காண்கின்றேன் ஏட்டில் எழுதியதைக் காட்டிஎனை ஏய்க்கின்றார்; நாணயத்தைச் சேர்ப்பதற்கு நாணயத்தை விற்றுவரும் வாணிகத்தார் என்றன் வளர்புகழைக் கொல்கின்றார்;130 ஊறவைத்து நாறவைத்து - ஊரெல்லாம் எற்பழித்துக் கூறவைத்த அந்தக் கொடுமைக்கோர் எல்லையுண்டா? நாட்டில் நடக்கவிட நாடாமல் எங்கெங்கோ போட்டுப் பதுக்குகின்றார் போலிக் கயவரெனைக் கண்டகண்ட திக்கிற் கடத்திக் கொடுபோகும் தொண்டர்களைக் காணுங்கால் தூவென் றுமிழீரோ? நாட்டு நலங்கருதும் நான்வாழும் நன்னிலத்தைக் கேட்டுக் குணம்படைத்துக் கீழ்வாழை செங்கரும்பு கூடிக் கவர்வதற்கோர் கொள்கை வகுத்திடுமேல் வேடிக்கை பார்க்க விழைவேனோ? என்னையிங்கு140 வாழ விடுங்கள் வளர விடுங்களெனத் தாழ உரைத்திடுவேன் தாண்டிவரின் போர்தொடுப்பேன் மக்கள் பொதுவாழ்வு மங்கலமாய்ப் பொங்கிவரத் தக்க வழிசெய்து தன்னாட்சி ஓங்கிடவே எண்ணி உழைத்திடுவேன் என்பணிக்கு நற்றுணையாய் நண்ணி வருவீர் நயந்து. பொங்கல் விழா -திருச்சி வானொலி நிலையம் 14.1.1968. |