பக்கம் எண் :

தமிழ் முழக்கம்193

13. மரத்தின் பெருமை

எண்சீர் விருத்தம்

ரமென்றால் எல்லாரும் *எண்மை யாக
    மதிக்கின்றார்; உண்மையினில் மாந்த ருக்குக்
கரவின்றி உதவுவதில் அதனைப் போலக்
    கண்டதிலை; நன்றிசொலி வாழ்த்த லின்றித்
தரமின்றிப் பழிக்கின்ற நிலைமை கண்டோம்;
    தண்ணென்ற நிழல்தந்து, காற்றுந் தந்து
வருகின்ற மேகத்தைக் குளிரச் செய்து,
    வான்மழையைப் பெய்விக்கும் மரத்தின் கூட்டம்.1

விதையென்னும் சிறுமுதலைப் போட்ட பின்னர்
    வியன்பெரிய மரமாகிப் பூத்துக் காய்த்துச்
சதையுடைய சாறுடைய கனிகள் ஆக்கிச்
    சார்ந்தோர்க்குச் சுவைநல்கிப் பசியை நீக்கி
விதைமுதலாம் ஒருவிதையைப் பன்னூ றாக
    விளைவித்துக் கண்டுமுதல் பெருக்கிக் காட்டும்
கதையுடைய மரம்போல வணிகப் பாங்கு
    கற்றவரை யாண்டுலகிற் கண்டோம் நாமே.2

மாடங்கள், கூடங்கள் தோன்றா முன்னர்
    மக்களுக்குக் கல்விதனைப் புகட்டு தற்குப்
பாடங்கள் அறிவுறுத்தித் தந்த தெல்லாம்
    படர்ந்துவளர் மரத்தடிதான்; எழுதி வைத்த


*எண்மை - எளிமை