பக்கம் எண் :

தமிழ் முழக்கம்195

காட்டுமரம் என்றாலும் மீன வர்க்குக்
    கட்டுமர மாகி, அது கடலில் ஓடும்;
நாட்டரசன் கையகத்துச் செங்கோ லாகி
    நல்லாட்சி புரிகின்ற குறியைக் காட்டும்;
கேட்டுணரும் மாணவரை முறைப்ப டுத்தக்
    கேள்விமிகும் ஆசான்கைக் கோலாய் நிற்கும்;
வீட்டகத்தே தூணாகிப் பிறவும் ஆகி
    விளைக்கின்ற பயனெல்லாம் விளம்பப் போமோ?7

இடுக்கண்கள் பலவாகிச் சூழ்ந்த போதும்
    இயல்பொன்றுங் கெடுதலிலாச் சான்றோர் போல
அடுத்தடுத்துத் தேய்த்தாலும் சிறிது கூட
    அதற்குரிய மணங்குன்றா மரங்க ளுண்டு;
படுக்கின்ற நிலையுற்ற பெற்றோர் தம்மைப்
    பரிவுடனே தாங்குகிற மக்கள் போல,
விடுக்கின்ற வேர்சிதைந்து முதிர்ந்த காலை
    விழுதுகளால் தாங்குகிற மரங்க ளுண்டு.8

ஓங்குபுகழ் இவ்வளவுங் கொண்டி ருந்தும்
    ஓரிரண்டு குறைகளையும் பெற்ற துண்டு;
தீங்குடைய கீழ்மக்கள் தாம்பி றந்த
    தேயத்தைக் கேடுறவே செய்வ தைப்போல்
நீங்கரிய காட்டகமாந் தாய கத்தை
    நெருப்பதனால் கேடுறுத்தும் மரமும் உண்டு;
மூங்கிலெனும் அம்மரந்தான் மோதி மோதி
    முன்பிறந்த வீட்டுக்கே கொள்ளி வைக்கும்.9

அரம்போலுங் கூர்மைமிகும் அறிவ ரேனும்
    அயலவர்தம் துயர்க்கிரங்காச் சிலரைப் போல
மரஞ்சூழும் காட்டகத்தே அருகில் நிற்கும்
    மரமொன்று வாடுகிற பொழுது கண்டும்