பக்கம் எண் :

204கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3

15.பிறவிக் கவிஞன்

எண்சீர் விருத்தம்

சங்கத்துப் புலவரெலாம் காத்த ளித்த
    சாறுநிறை கனிமரங்கள் நிறைந்தி ருக்கும்,
செங்குட்டு வற்கிளையோன், கம்ப நாடன்
    திருத்தக்கன் நடுசெடிகள் படர்ந்தி ருக்கும்,
எங்கட்கோர் உயிர்மூச்சாய் இயங்கு கின்ற
    இனியதிருக் குறளென்னும் தென்றல் வீசும்
துங்கத்தொல் காப்பியனார் இட்ட வேலி
    சூழ்ந்திருக்கும் இலக்கியப்பூஞ் சோலைக் குள்ளே.1

புகுந்திருந்து சிறைவிரித்துப் பறந்து சுற்றிப்
    பூத்துள்ள எழில்கண்டு கனிசு வைத்து,
மிகுந்துவரும் எக்களிப்பால் கூவிக் கூவி
    மிதந்துவரும் இசைபரப்பி இன்பம் நல்கி,
மகிழ்ந்திருந்த ஓர்குயிலைக் கண்டு வந்து
    மாகவிஞர் பாரதியார் பற்றி வந்தார்;
அகங்கனிந்து கனிநல்கி வளர்த்துப் பின்னர்
    அக்குயிலைத் தமிழ்மொழிக்கே வழங்கி விட்டார்.2

பாரதியார் வழங்குகொடை யாக வந்த
    பாவேந்தன் பாரதிக்குத் தாசன் என்பான்

சீரறியார் யாருள்ளார்? அந்த வள்ளல்
    சிறிதளித்த கொடையாலே கவிஞர் ஆகி