பக்கம் எண் :

206கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3

அதுவேண்டும் இதுவேண்டும் எனவி ரும்பி
    அடிவருடிப் பிழைக்கின்ற கயமை வேண்டான்;
எதுவேண்டும் நாடுயர என்று நோக்கி
    எழுச்சிமிகு கவிதைகளை ஈந்து நிற்பான்;
மதுவேண்டும் வண்டெனவே மாறி மாறி
    மாற்றார்க்கு வால்பிடித்துத் திரிய மாட்டான்;
சதிவேண்டான் மற்றவரைத் தாழ்த்த எண்ணான்,
    சங்கத்துப் புலவனென வாழ்ந்த மேலோன்.7

பாரிவிழா

பறம்புமலை

18.4.1970