பக்கம் எண் :

208கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3

தெருட்டுகின்ற தமிழியக்கம் ஒன்று தந்தான்;
    திரிகாற்று கதிர்திங்கள் இவற்றி னுள்ளே
உருக்கொண்டு சிரிக்கின்ற அழக னைத்தும்
    உருவாக்கி நமக்களித்தான் உலகம் போற்ற.3

கூத்தடிக்க நாடகநூல் தந்தா னல்லன்
    கொள்கைக்கே நாடகங்கள் எழுதித் தந்தான்;
பூத்தொடுத்த குழல்மடவார் தம்மைத் தாழ்த்தும்
    புன்மைகளை மாய்ப்பதற்கு, வீரம் மிக்க
பாத்திறத்தான் தமிழச்சி ஏந்தும் கத்தி
    படைத்தளித்தான்; நினைந்துநினைந் துள்ளம் பொங்க
ஏத்தெடுக்கும் முத்திரையாய் விளங்க வேண்டி
    எதிர்பாரா முத்தமொன்று தந்து வந்தான்.4

காவியங்கள் எனும்பெயரில் நல்ல நல்ல
    கருத்துகளை உள்ளடக்கி நிலைத்து நிற்கும்
ஓவியங்கள் பலதந்தான்; பரிசி லாக
    உயர்பாண்டி யன்பரிசில் எனும்நூல் தந்தான்;
பூவியங்கும் செழுந்தேனோ? கரும்பின் சாறோ?
    புரட்சிக்கு நடும்வித்தோ என்று மக்கள்
நாவியந்து போற்றுவணம் தொகுதி யாக
    நல்லகவி மலர்தொடுத்து நமக்க ளித்தான்.5

பயில்கின்ற நெஞ்சமெலாம் வண்டாய் மொய்த்துப்
    பைந்தமிழ்த்தேன் சுவைக்கின்ற முல்லைக் காடு;
மயில்திரியும் தென்பொதிகைக் குற்றா லத்து
    மலையிறங்குந் தேனருவி; துன்பம் என்னும்
மயல்இரிய நம்முளத்தை இளமை யாக்கி
    மகிழ்வுதரும் இசையமுது பாடித் தந்தான்;
இயல்பினிலே அமைதியினன்; எழுச்சி கொண்டால்
    இரணியன்தான், எதிர்நிற்க எவரு மில்லை.6

கொடைதந்தான் பாவேந்தன் பெற்றுக் கொண்டோம்;
    கொடுத்தவற்றைப் பயன்படுத்தி வாழ்ந்த துண்டா?
விடைதந்து தலைநிமிர்ந்து நிற்ப தற்கு
    விதியுண்டா? மதியுண்டா? வெட்கம்! வெட்கம்!
படைதந்தான் வீரரென நமைநி னைந்து;