பலநாளிதை மொழிவானவன் பயனேஇலை அடஓ! சிலையாமென இருந்தோம்செவி செவிடாகிய ததனால்.14 கொண்டவர் மாண்டனர் என்பதால் மங்கையர் கோலமெ லாமழித் தோம் - எதிர் கண்டவர் ஏசிடக் கைம்பெண்டிர் என்றபேர் கண்ணீ ருடன்கொடுத் தோம்.15 கொண்டவள் போனபின் நின்றிடும் ஆண்மகன் கூடிக்கு லாவிடு வான் - எனில் கண்டுநிகர்மொழிப் பெண்டிரை மட்டிலும் காதல் மறுத்திடல் ஏன்?16 கோரிக்கை யற்றுக் கிடக்குதடா இங்கு வேரிற் பழுத்த பலா - எனக் கூறிக்கை தந்திட வேண்டுமென் றானவன் கோலக்கை தந்தவ ரார்?17 எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கெனப் பொங்கி முழங்கிடச் சங்கமொன் றளித்தான் சங்கமது முழங்காமல் போயொளிந்த தெங்கே?18 வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம் தங்குதடை யில்லாமல் தந்தகவி சொன்னமொழி எங்கே போச்சாம்? இங்கினியும் செந்தமிழில் கல்விசொல வழியிலதேல் என்ன பேச்சாம்?19 பாரிவிழா பறம்புமலை 18.4.1970 |