பக்கம் எண் :

தமிழ் முழக்கம்217

நாட்டுக்குப் பாட்டுரைத்து விருது பெற்ற
    நாமக்கல் கவிஞரும்ஓர் நல்லா றாவர்;
ஏட்டுக்குள் அடங்காத கவிஞ ரான
    எம்போல்வார் கிளைநதிகள் ஆவோம் கண்டீர்;
பாட்டுக்குப் பரம்பரைகள் தோன்றி நின்று
    பயனல்கும் வாய்க்கால்கள் பலவும் உண்டு
கேட்டுக்குத் துணைபோவார் கவிதை என்று
    கிறுக்கிடுவர் அவரெல்லாம் வடிகால் ஆவர்.17

இந்துமதாபிமான சங்கம்
காரைக்குடி
16.9.1973