218 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3 |
18. அண்ணல் நடந்த அடிச்சுவடு கலிவெண்பா பெற்றெடுத்த தாய்நாட்டைப் பேணி வளர்க்கின்ற பற்றுளத்தை விட்டுப் பதராக வாழ்ந்திருந்தோம்; வாணிகத்தால் நம்நாட்டில் வந்து புகுந்தவர்கள் கூனுளத்து வஞ்சகர்தம் கூட்டுறவால் ஏமாற்றி நாட்டைப் பறித்தார்கள் நாமடிமை ஆகிநின்றோம்; கேட்டை உணராமல் கீழடிமை செய்துவந்தோம்; தாயகத்துச் செல்வமெலாம் தம்முடைமை யாக்கி அவர் போயவற்றால் வாழ்வைப் புதுக்கி மகிழ்ந்தார்கள்; எல்லா வளமிருந்தும் எழையராய் நாமிருந்தோம்; பொல்லா வறுமையினால் பொன்றிக் கிடந்துழன்றோம்;10 தாய்நாட்டு மண்ணில் தலைநிமிர்ந்து வாழாமல் சேய்நாட்டார் காலடியிற் சிக்கித் தவித்தடிமை செய்து மகிழ்ந்திருந்தோம் சிந்தனையும் அற்றிருந்தோம்; கைதி எனவாழ்ந்து காலங் கழித்துவந்தோம்; நாட்டுக் குரியவர்யார்? நாம்யார்? எனவறியோம்; கூட்டுப் பறவையெனக் கொத்தடிமை ஆகியதால் நல்ல நினைவிழந்து, நாகரிகப் பண்பிழந்து, செல்லும் நெறிதிரிந்து, சீர்மை மிகவிழந்து, கண்கள் இரண்டிருந்தும் காணாக் குருடர்களாய், நண்ணும் செவியிருந்தும் நல்லொலிகள் கேளாராய்,20 |