பக்கம் எண் :

22கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3

*தென்னாட்டைத் **தொன்றுமுதிர் காலங் கண்ட
    தேன்மொழியை அவ்வினத்தை இழித்துப் பேசின்
***வெந்காட்டச் செய்திடுவேன் எனச்சி னந்து
    ¶விறல்மிகுக்கும் செயல்செய்தார், சிறையும் சென்றார்,
இந்நாட்டிற் சாதிமுறை ஒழிக என்றார்,
    இகழ்வுரையும் கல்லடியும் பெற்றா ரேனும்
முன்னோக்கிச் செல்கின்றார், உரமே மிக்கார்,
    மூடமதி இருள்செகுக்குங்‡ கதிரே போல்வார்(9)

*உடல்பழுத்தும் நரைமுதிர்ந்தும் நடந்து செல்ல
    ஊற்றுக்கோல் துணைகொண்டும் தளரா நெஞ்சர்,
மடம்படுத்த பழமைஎலாம் வேர றுந்து
    மடமடெனச் சாய்ந்தொழியத் தமிழர் வாழும்
இடமெல்லாம் புயல்வீசப் புரட்சி செய்தார்,
    இளைஞர்படை அறிஞர்படை பெருகக் கண்டார்,
திடங்கொண்ட நம்பெரியார் அரிய செய்தார்.
    திருவிடத்தின் மன்னரெனும் உரிமை எண்ணம்;(10)

புந்திக்குப் பொருந்தாத கொள்கை மாய்க்கப்
    புரட்சிசெயும் நல்லறிஞர், தீய சொற்கள்
தந்தவர்க்கும் நாணும்வகை நன்மை செய்வார்,
    ‡தண்டாத சொல்லருவி, கலையின் தேக்கம்,
செந்தமிழ நாட்டுக்கு வாழ்நாள் எல்லாம்
    சேவைசெய்வார், காஞ்சிநகர் தந்த செம்மல்,
பந்தமுடன் அண்ணாஎன் றழைக்கப் பெற்றார்
    படும்பாடு நம்நாடு தழைக்கும் எண்ணம்.(11)


*இவ்விரு பாடல்களும் தந்தை பெரியாரைக் குறிக்கின்றன.
**தொன்றுமுதிர் - பழமைமிகுந்த ***வெந்காட்ட - புறமுதுகிட ¶விறல்மிகுக்கும் - வலிமை மிகுந்த
‡செகக்கும் - அழிக்கும் ‡தண்டாத - குறையாத