பக்கம் எண் :

கவியரங்கில் முடியரசன் 25

அரசிருக்கை தமிழ்மொழிக்கே நல்க வேண்டும்
    ஆள்வோரும் இதையுணர வேண்டும் ஈது
தரிசுநிலம் அன்றெமக்கும் உணர்ச்சி யுண்டு
    தமிழ்மொழிக்கே உயிரீயும் இளைஞர் உண்டு
பரவிவரும் தென்றலென இனிது சொல்வோம்
    படியாமற் புறக்கணித்தால் வெகுள்வோம் போரின்
முரசொலியே கேட்குமென உரைப்ப தெல்லாம்
    முடியரசர் வளர்த்ததமிழ் வாழும் எண்ணம்.(18)

தலைவர்:பாவேந்தர் பாரதிதாசனார்

தலைப்பு:நாகரிகம் - எண்ணம்

இடம்:அழகப்பா கல்லூரி - காரைக்குடி

நாள்:31-12-1955