26 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3 |
4. உணவு கலிவெண்பா உணவுதனைப் பற்றி உயர்கவிதை யாக்கக் கனவுலகிற் சென்றேன்: கடும்பசியோ என்வயிற்றில் ஆடித் திரிந்துழல ஐயையோ என்புலமை ஓடித் தறிகெட் டொருசொல் வரக்காணேன்: பாழ்பசி வந்துவிடின் பத்தும் பறந்துபோம் சூழ்நிலையை இன்றுணர்ந்தேன்: தூய மனத்தெளிவும் பொங்கும் கவியுணர்வும் பூரிக்கும் நன்மகிழ்வும் தங்குமோ இவ்வுலகில் சாரும் உணவின்றேல்? அன்பேது? நெஞ்சில் நிறைவே(து)? அறிவமைதி என்பதுதான் ஏதேது? வாழ்க்கை வளமெய்த உண்டியொன்றே வேண்டுவ(து): உண்மையீ தென்பதனைக் கண்டுணர்ந்தேன் ஆதலினால் கால்வயிறே னும்நிரப்பிச் செய்யுள் புனைவமெனச் சிந்தித்துச் சேயிழாய்! உய்யும் வகையுண்டோ உண்டி சிறிதுண்டோ? என்றேன்; செவியேற்ற ஏந்திழையாள் ஓடிவந்து “சென்ற முதல்நாளிற் செய்தபடி செய்தேன்” எனவுரைத்தாள்; பொங்கலோ? என்றெழுந்தேன்; “இல்லை மனவருத்தம் பொங்கலலால் மற்றில்லை பக்கத்துப் |