28 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3 |
சாத்தன் பகர்ந்ததற்பின் சான்றின்னும் வேண்டுவதோ? ஏத்துங் கலையுணர்(வு) எங்கே உணவின்றேல்? செய்யுளெழ வில்லை; செயலின்றி நானிருந்தேன்; பையவந் தென்துணைவி “பூசைப் பணியாற்ற எல்லாம் அமைத்தேன் எழுகவெனச் சொல்லியதும் நல்லாய்! பசியால் நலிவெய்தும் போது கடவுள் உணர்வகத்தில் காணல்எளி தாமோ? மடமை தொலைத்துயர்த்தும் மாண்புள்ள கல்வி பயில்என்றால் பையன் பசிஎன்று தேம்பி அயர்கின்றான் ஆதலினால் கல்வி அறிவேது? தூய அறமேது தொல்லை பெருகலன்றி? ஆய கலையே(து) அறியாமை சூழலன்றி? நாட்டிற் பசியிருந்தால் நல்லனவே தோன்றாஎன் றீட்டி உணவூட்டல் ஏற்ற அறமென்று வாழ்வுதனை அப்பணிக்கே வைத்தமணி மேகலைசொல் நாளும் நினைவிருத்தி நாம்வாழ வேண்டும்; இரந்துமுயிர் வாழும் இழிநிலையை நீக்கப் பரந்துதொண்டு செய்வதற்குப் பக்குவமும் வேண்டும்; அறிவு வளர்ந்தால் அடிமைமனம் மாயும்; அறிவு வளரஎனில் அப்பசியை மாய்க்கத் திறம்வேண்டும்; ஏர்த்தொழிலைத் தேய்க்காமல் காக்கும் உரம்வேண்டும்; அத்தொழிலோர் உள்ளத்தில் இன்பொன்றே நிற்கச் செயல்வேண்டும் நேரிழையே என்றுரைத்தேன்; நிற்கட்டும் சொற்பொழிவு! நேற்றுரைத்த சொல்லுக்கு |