மாற்றம் உரைக்கின்றீர்* மாண்டநல்ல சங்கத்தார் சோற்றுக் கவலையினால் சொல்லியநற் பாட்டுகள் நன்றுநன் றென்றீரே நானெதைத்தான் நம்புவது?” என்றுரைத்தாள்; பேதாய்! எடுத்துரைப்பேன்; சோறின்றிப் பாடிய பாட்டெல்லாம் கோடிபெறும் பான்மையவேல் வாடி வதங்காத வாழ்வவர்கள் பெற்றிருந்தால் அப்பப்பா! நூற்செல்வம் ஆயிரம் ஆயிரமாச் செப்பிக் குவித்திருக்க மாட்டாரோ? தீப்பசியால் பாட்டுவரும் என்னுமுரை பாழாக வேண்டுமிங்கே நாட்டிற்பா வல்லார் நலிவெய்தக் கண்டிருந்தும் பாரா தவர்போலப் பாசாங்கு செய்துவிட்(டு) ஆரா வறுமையில் ஆழ்த்துகிறார் அந்தோ! ஒருவன் பசியால் உலகுக்கே தீமை வருமென்றால் அவ்வுணவு வாழ்வுக்கே அச்சன்றோ? வாழ்க்கை வளமுறநாம் வேண்டின் உணவொன்றே ஆக்கும் பொருளென் றறிந்ததனைக் காத்தோம்பிப் பாரதனில் யார்க்கும் பகிர்ந்துண்டு வாழ்வதற்கே ஓருறுதி கொள்வோம் உவந்து. தலைப்பு:வாழ்க்கை வளமுற - உணவு இடம்:வானொலி நிலையம் - திருச்சிராப்பள்ளி நாள்:2-3-1956
மாண்ட - மாட்சிமைப்பட்ட |