34 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3 |
அடிமையில் மோகம் அழிக்கும் சுடரொளி; தாய்கை விலங்குகள் தகர்க்கும் சிற்றுளி(90) இன்னல்கள் தீர்க்கும் இனியநன் மருந்து; ஒருவற் குணவிலை எனும்உரை கூறின் உலகை அழிப்போம் எனவெழும் அணுவெடி; சாதி மதங்களைச் சாய்த்திடும் கொடுவாள்; அறிவுரை தருநூல் கற்றோர் மற்றோர் கற்பதற் கெளியது;(95) தேன்படு சுளைஎனத் தித்தித் திருப்பது; தாய்மொழி மறந்து தாழ்வினில் விழுந்து தமிழர் எனும்பெயர் தாங்கிடும் அன்பர் ஆணவம் அடங்க அறிவுரை புகல்வது; என்னால் ஒல்லுமோ? “திங்களைக் கண்ணிலான் சிறப்புறுத் தல்போல்(100) பாரதிப் புலவனைப் பகர்வன்” என்று பாரதி தாசன் பாடின ராயின் எளியேன் என்னால் இயம்பிடல் ஒல்லுமோ? அவனும் நாமும் வாழத் தமிழ்மொழி வழிகள் காட்டினன் நீளத் திரிந்து நெறிதடு மாறிக்(105) கண்குரு டாகிக் காலங் கழித்தோம் நாட்டுணர்வூட்டும் பாட்டுகள் சொன்னான் கேட்டில செவிகள் கிடந்தனம் செவிடாய் இசைத்தமிழ் பாடினான் இனித்தது தெரிந்தும் வசைக்கிலக் காகித் தமிழிசை மறந்து(110) வாய்திற வாமல் ஊமைய ராகி வாழ்ந்தோம், மங்கையர் வாழ்வினிற் புதுமை |