பக்கம் எண் :

கவியரங்கில் முடியரசன் 35

மலர்ந்திடக் காணோம், மதவெறி கொண்டோம்,
பழமைச் சேற்றில் படிந்தோம், மூடச்
செயல்கள் பலவும் சேர்த்தோம் அந்தோ?(115)
ஒற்றுமை விடுத்தோம், கற்றவை மறந்தோம்,
செற்றிடு விலங்குச் செயல்கள் மிகுந்தோம்,
அவன்மொழி மறந்தோம், ஆர்ப்பரித் திருந்தோம்,
மண்டபங் கண்டோம், மாலைகள் சூட்டினோம்,
கவிதைத் தொகுப்பெலாம் கண்கவர் முறையில்(120)
அச்சில் வெளியிட் டகமிக மகிழ்ந்தோம்;

கயமை வேண்டா

ஐயகோ பற்பல பாடல்கள் காணோம்
சிதைந்தன சிற்சில, சீரில சிற்சில,
கவிதையை மறைத்தோம், கவிஞனைக் குறைத்தோம்,
பாரதி முகத்தில் படரும் மீசையை(125)
நறுக்குந் தொழிலில் நாம்புகல் நன்றோ?
கத்திரி வேலை காட்டுதல் தீமை;
உலகம் பழிக்கும்; ஓங்குயர் கவிஞன்
கண்ணைக் குத்துங் கயமை வேண்டா

வாழிய உலகு

அவனை உணர்வோம் அவன்வழி நடப்போம்(130)
நாடும் மொழியும் நலம்பெறச் செய்வோம்
வாழிய பாரதி! வாழிய தமிழ்மொழி!
வாழிய தமிழினம் வாழிய!
வாழிய தமிழகம் வாழிய உலகே!

தலைவர்:திரு.சா. கணேசனார்

இடம்:ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி - பாரதி விழா, காரைக்குடி.

நாள்:24.9.1955