பக்கம் எண் :

கவியரங்கில் முடியரசன் 47

8. திரு. வி. க.

எண்சீர் விருத்தம்

குறளென்னுஞ் சொற்பொருளைச் சிறிதுங் காணார்
    குலவுதமிழ் இலக்கணத்தை என்றுங் கேளார்
அறநூலோ பிறநூலோ ஒன்றுந் தேறார்
    அகரமுதல் வரிசைமட்டும் தெரிந்தாற் போதும்
குறளிடத்துக் குறைசொல்வார் திருத்தம் செய்வார்
    புத்துரையுங் குறித்துரைப்பார் திருக்கு றட்குப்
பிறவுரைகள் சரியில்லை பிழையே என்பார்
    பெருகிவரக் காண்கின்றோம் இந்த நாளில்(1)
கற்றற்குத் தகுநூல்கள் கசடு நீக்கிக்
    கற்றுப்பின் அவைசொல்லும் வழியில் நின்று
முற்றுமுணர் அறிவினராய் வாழ்ந்து காட்டி
    முதற்புலவன் வள்ளுவன்செய் குறள்நூ லுக்குத்
*தெற்றெனுமா றுரையெழுதிக் காட்டி அந்தத்
    திருநெறியில் திரு. வி. க. வாழ்ந்து நின்ற
**பெற்றியையான் ஓரளவு தெரிந்த வண்ணம்
    பாடுகிறேன் பிழையுளதேல் பொறுத்தல் வேண்டும்(2)

கடவுட் கொள்கை

ஒருநூறு சமயங்கள் படைத்துக் காட்டி
    உட்கிளைத்த சமயங்கள் பலவுங் கூட்டிப்


*தெற்றெனுமாறு - தெளிவாக, **பெற்றி - இயல்பு