சொல்வல்ல நல்லறிஞர் காஞ்சி அண்ணா துரைஇவர்தம் கருத்துரையை மறுத்து ரைப்பார் வில்விடுக்கும் அம்பெனவே சிலகால் தாக்கி விரிவுரைகள் ஆற்றிடுவார்; கேட்டி ருந்தும் நல்லுள்ளம் கொண்டஇவர் நயந்து பேசி “நல்லவரே இவ்விளைஞர் தமிழன்” என்றே சொல்லிடுவார்; அழச்சொல்லி இடித்து ரைக்க வல்லார்நட் பாய்ந்துகொளும் தூய நெஞ்சர்(25) இவ்வண்ணம் வள்ளுவர்தம் வழியில் நின்ற என்தலைவர் திரு. வி. க. வாழ்விற் கண்ட மெய்வண்ணம் ஒருசிலவே விளம்பி நின்றேன் மேலான மெய்ந்நெறியே அவர்தம் தோற்றம் உய்வண்ணம் நமக்கவர்தாம் உணர்த்திச் சென்ற உண்மைகளை மறவாமல் ஓர்ந்து நின்று செய்வண்ணம் செயலாற்றி வாழ்வோம் வாழ்வோம் செந்தமிழும் நம்நாடும் வாழ்க! வாழ்க!(26) முடிப்புரை சிறந்தபுலச் சான்றோரை ஆக்கித் தந்தால் தென்னகமும் தேயாது வாழும் என்றால் மறைந்துவிட்ட திரு. வி. க., மொழிக்குன் றாய மறைமலையும் பாரதியும் உரிமை வேட்கை உரந்தழுவும் சிதம்பரனார், கல்வி கேள்வி உயர்கம்பன், இளங்கோவும் யாரோ சொல்வீர் திறங்கொண்ட பலர்பலரைத் தந்தும் தெற்குத் தேய்ந்ததுமேன்? ஆட்டுவித்தால் ஆடார் யாரே?(27)
ஒருமுறை திராவிடர் கழகப் பொதுக்குழு சென்னையில் கூடியது. அக்கூட்டத்தில் அனைவரையுமே ஆட்சியாளர் சிறை செய்தனர். கொதித்தெழுந்த திரு.வி.க. ‘காவல்துறை ஆணையாளர்’ தடையுத்தரவைக் காட்டியுங் கூடக் கண்டனக் கூட்டத்தை வெற்றி பெற நடத்தினார். |