பக்கம் எண் :

56கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3

“ஆட்டுவிக்க ஆடாமல் நாமே ஆள
    அரசுரிமை எய்தியபின் யாவ ரோடும்
கூட்டுறவு கொளல்நன்றாம் தமிழும் வாழும்
    குலையாமல் தென்னகமும் வாழும்” என்று
கூட்டமெலாம் திரு. வி. க. கூறி வந்தார்;
    குறுகியநோக் கென்றுசிலர் திரித்துச் சொல்லிக்
காட்டுவதை நம்பாதீர்! தென்ன கத்தைக்
    காப்பதுவே நமதுகடன் வாரீர்! வாரீர்!(28)

தலைவர்:வள்ளுவர் வழியில் திரு.வி.க.

இடம்:குறள் விழா - காரைக்குடி

நாள்:11-8-1957


இவ்விழாவில் பேசிய ஒருவர் சான்றோர்களை உண்டாக்கித் தந்தால் தெற்குத் தேயாது என்றார். அவர்க்கு மறுமொழி தரும் வகையில் கவியரங்கத் தலைப்புகளாகத் தரப்பட்ட சான்றோர்களை அமைத்துப் பாடப்பட்டது முடிப்புரை.