பாண்டியன் செங்கோல் பழுதுபடக் காரணமென்? ஆண்டோர் அறிஞனிலாக் காரணமே ஆகும்; அரசியலில் அறிஞர் அறிவுடையோன் நல்லா றரசேகின் நல்ல நெறியுடைய நாடாகும் நேரிழையே! முன்பிருந்த ஆள்வோர் குடிகளிடம் அண்டி வரிவாங்கி வாழ்முறைகள் கூறி வழிசெய்தார் அன்றறிஞர்; தம்முட் பகைகொண்ட தார்வேந்தர் போர்தவிர்த்துச் செம்மை நெறிநடக்கச் செய்தார்கள் அன்றறிஞர்; மாதே அரசியலில் மாண்புடன் ஆள்பவர்கள் தீதிலா யாழுக்குத் தெள்நரம்பே போல்வார்கள், வீணை நரம்பை மிழற்ற விரல்வேண்டும், ஆணை செலுத்தும் அரசுக் கிவர்வேண்டும், பாட்டுச் சிதையாமல் பண்படுத்தி இன்புறுத்திக் காட்டும் இலக்கணமாய்க் காவல் புரிவார்கள், காதல் வளர்ந்தொளிரக் கண்பார்வை எப்படியோ ஓதும் அரசுக் குயர்அறிஞர் அப்படியாம்; அரசியல் போலிகள் இந்நாட் டரசியலும் இன்னுந் தலைசிறந்த எந்நாட் டரசியலும் எண்ணிஎண்ணிக் கற்றிருப்பார் கல்விச் சிறப்பிருக்கும் கற்றபடி பேச்சிருக்கும் இல்லை இவர்க்குநிகர் என்னும் படியிருக்கும் ஆனால் அரசியலில் ஆளும் பொறுப்பேற்கப் போனாலோ அத்தனையும் போயொழியும், அப்பதவி
|