என்னுமோர் ஐயம் எழுப்பினள் என்மனையாள்; இன்னும் இருக்கின்றார் எத்துணையோ பேரென்றேன்; அவர் யார்? “ஓரிருவர் சொல்லுங்கள் அத்தான்!” எனவுரைத்தாள்; யாரெனநான் ஈங்குரைத்தல் நன்றன்று மற்றொருநாள் அப்பெயரைச் சொல்கின்றேன் என்றேன்; முகஞ்சுழித்துத் “தப்பென்ன? சொல்”கென்றாள்; சத்தமின்றிக் காதருகே பேர்சொன்னேன்; மாமழையின் பேரருளால் என்வீட்டில் நீர்சொட்டக் கண்விழித்தேன் நேற்று. தலைப்பு:புதியதோர் உலகு - அரசியல் அறிஞன் இடம்:வானொலி நிலையம் - திருச்சிராப்பள்ளி நாள்:14-4-1958 விளம்பி ஆண்டுப் பிறப்பு |