74 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3 |
ஐயம் *மின்காட்டும் சிற்றிடையாள் **மேனாட்டின் ஆரணங்கோ? தென்னாட்டுக் காரிகையோ? அன்றி வடநாட்டுப் பேரணங்கோ? எந்நாட்டாள்? யாரென்று பேதுற்றேன்*** காரணங்கள் கண்டவுடன் என்னாட்டாள் என்றறிந்தேன்; தெளிவு சிற்றிடையில் காஞ்சிபுரச் சீலை உடுத்தியதால், சுற்றிமணி மேகலையும் சூழுவதால், மார்பகத்துச் சிந்தா மணிஎன்னும் செம்மணியைப் பூணுவதால், செந்தா மரைபுரையும் சீறடியில் மாண்புமிகு செஞ்சிலம்பு கொஞ்சுவதால், சேர்ந்தெனது நெஞ்சிலுறை வஞ்சியவள் கையில் வளையா பதிகலிக்கக் குண்டலமோ காதணியாய்க் கூடி விளங்குவதால், கண்டாள்மேல் ஐயம் கடிதகற்றி அம்மகள்தான் தென்னாட்டுக் காரிகையே செய்ய தமிழணங்கே என்பாட்டிற் கூடும் தலைமகளே என்றுணர்ந்தேன்; புனல்தரு புணர்ச்சி வெற்பின் சுனைநீரால் வேட்கை தணிப்பதற்கு முற்படுவாள் என்வேட்கை மூளுவதைத் தானறியாள்; நீர்பருகுங் காலை நிலைதவறி உள்வீழ்ந்தாள் ‘ஆர்வருவார் காப்பதற்கே ஐயகோ!’ என்றரற்றத்
*மின்காட்டும் - மின்னலைப் போன்ற, **மேனாட்டின் - வானுலகின் ***பேதுற்றேன் - மயங்கினேன், ¶வெற்பு - மலை |