பக்கம் எண் :

80கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3

12. எனக்கும் ஓர் அதியன்

நேரிசை ஆசிரியப்பா

குறள்நெறிவாழும்கொள்கைக்கோவே!

அருள்நெறிஒழுகும்அண்ணால்!எங்கள்

சுப்பிரமணியத்தோன்றால்!வணக்கம்

மெய்ப்பொருள்உணர்ந்தமேலோய்!வணக்கம்

தந்தாய்!என்னுயிர்தந்தாய்!என்கோ?

அன்னாய்!என்னுயிர்அன்னாய்!என்கோ?

இன்னருள்புரியும்என்கோ!என்கோ?

எவ்வணம்நின்னைஏத்திப்புகழ்வேன்!

செய்வணம்அறியேன்சிறியேன்நின்னடி

நெஞ்சத்திருத்திநினைகுவன்

அஞ்சலென்றருளுகதஞ்சம்நீயே (1)

எண்சீர் விருத்தம்

ஒழுக்கத்தின் உறைவிடமே! தொண்டும் பண்பும்
ஒன்றாகி உருவெடுத்த நல்லோய்! மக்கள்

அழுக்ககற்றும் திருக்குறளின் வார்ப்பே! எங்கள்
ஐயாவே! அருளூற்றே! அன்பும் நண்பும்

பழுத்திருக்கும் குளிர்தருவே! தொன்று தொட்டுப்
பாங்குயர்ந்த குடிப்பிறப்பே! ஏழை மக்கள்

வழித்துணையே! மணித்திருநாள் பெற்றோய்! நின்றன்
வாழ்வெல்லாம் நலம்பெற்று வாழ்க வாழ்க(2)


தந்தாய் - தந்தையே, என் உயிர் தந்தாய் - என் உயிரை மீட்டுத் தந்தவனே
என்கோ - என்பேனா அன்னாய் - தாயே, என் உயிர் அன்னாய் - என் உயிர் போன்றவனே
என் கோ என்கோ - என் தலைவன் என்பேனா