82 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3 |
எழுத்தறிய மாட்டாமல் ஏங்கும் நாட்டில் எண்ணரிய திருப்பணிகள் எங்கும் ஆக்கி வழுத்துகின்ற மாந்தருக்கு நன்றுசொன்ன வாய்மொழியைப் பாரதியின் பாடல் தன்னை வழுத்திஅதை வாழ்வாக்கிக் கல்வித் தொண்டை வழுவாமல் ஆற்றுவதே கடவுள் தொண்டென் றழுத்தமுற மனத்திருத்தி நாளும் செய்வாய்! அறநெறியின் தனிமுதலே! வாழ்க வாழ்க!(7) உன்குணமும் உயர்ந்தஒரு தாய்வ யிற்றில் உடன்பிறந்த கோவிந்த சாமி என்போன் தன்குணமும் சீர்தூக்கிக் காணுங் காலை சரியாக நிறைகாட்ட முடியவில்லை; உன்குணமும் அவன்குணமும் ஒன்றை யொன்று விஞ்சவதால் உணர்ந்தறிய இயல வில்லை; நன்கொடையும் உயர்பண்பும் குடிப்பி றந்த நல்லோர்க்கு வாய்க்கின்ற இயல்பு போலும்(8) ஈகைமனம் பெற்றவனே! அறுபான் ஆண்டை எய்துகின்ற இந்நாளில் நின்னை நாங்கள் வாகைபெறும் பெரியாராக் காணு கின்றோம்; மருத்துவத்துக் கலைஞர்தமைக் கருப்பஞ் சாற்றுப் பாகைநிகர் செந்தமிழில் பாடல் நல்கும் கவிஞர்தமை, இலக்கியத்தில் தோய்ந்தெ ழுந்து மேகமெனச் சொல்பொழியும் அறிஞர் தம்மை மேலாக்கி மகிழ்ந்தவன்நீ அண்ணா!* வாழ்க!(9) *சீலமிகு சான்றோனே! நின்னி டத்துச் சிலகுறைகள் நான்கண்டேன் கூறு கின்றேன்; ஞாலமிசைத் திருக்குறளே ஓங்க நெஞ்சில் நாடுகிறாய்! தமிழொன்றே போற்று கின்றாய்! கோலமொழித் தமிழ்நெஞ்சங் கொண்ட வர்க்கே கொடுக்கின்றாய்! குறைகாணின் கடிந்து ரைப்பாய்! மேலுமெனைப் போல்வார்க்கும் பணிந்து நிற்பாய்! மேலேனே கணக்கறியாய் ஈயும் போது!(10)
*அண்ணா - இவரை எல்லாரும் ‘பிரதர்’ என்றே அழைப்பதால் அண்ணா எனப் பெற்றார். |