13. பாரதி - வீரன் எண்சீர் விருத்தம் பாரறியும் சரவணனார் தவக்கொ ழுந்தே! பரம்பரையாற் பெறுபுலத்தாற் கலையை ஆய்ந்து சீரறியும் கூரறிவுச் சான்றோய்! ஞானச் செந்தமிழ்வல் சம்பந்தா! தலைமை கொள்வோய்! பாரதியின் புகழ்பாட விழைந்து வந்த பாவலர்காள்! அவையோரே! வணக்கம்; என்னை வீரன்புகழ் பாடென்று விதித்து விட்டார் வீரத்தை மீசைதனிற் கண்டார் போலும்(1) பாரதியின் தாசனுக்குப் ‘பொன்னி’ கண்ட பரம்பரையில் வந்தமையால் வீரம் என்பால் சேருமெனக் கருதினரோ? யாது சொல்வேன்! செந்தமிழில் தாய்நாட்டில் பற்று மிக்கோர் ஆருமுரம் மிகப்பெற்று வீர ராவர்; அப்பற்றும் கவிநெஞ்சும் வாய்க்கப் பெற்ற பாரதியை வீரன்தான் என்று கூறல் பசுவின்பால் வெண்ணிறந்தான் என்றல் போலாம்(2) யார் கவிஞன்? காசுக்குப் பாடுபவன் கவிஞன் அல்லன்; கைம்மாறு விழைந்துபுகழ் பெறுதல் வேண்டி |