86 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3 |
மாசற்ற கொள்கைக்கு மாறாய் நெஞ்சை மறைத்துவிட்டுப் பாடுபவன் கவிஞன் அல்லன்; தேசத்தைத் தன்னினத்தைத் தாழ்த்தி விட்டுத் தேட்டையிடப் பாடுபவன் கவிஞன் அல்லன்; மீசைக்கும் கூழுக்கும் ஆசைப் பட்டு மேல்விழுந்து பாடுபவன் கவிஞன் அல்லன்.(3) ஆட்சிக்கும் அஞ்சாமல், யாவ ரேனும் ஆள்கஎனத் துஞ்சாமல், தமது நாட்டின் மீட்சிக்குப் பாடுபவன் கவிஞன் ஆவன்; மேலோங்கு கொடுமைகளைக் காணும்போது காட்சிக்குப் புலியாகிக் கொடுமை மாளக் கவிதைகளைப் பாய்ச்சுபவன் கவிஞன் ஆவன்; தாழ்ச்சிசொலும் அடிமையலன் மக்கட் கெல்லாம் தலைவனெனப் பாடுபவன் கவிஞன், வீரன்.(4) முடியரசன் படைவலியால் நிலவுலகை ஆள்வர் மன்னர்; பாவலனாம் பாரதியோ உணர்ச்சி யூட்டும் *தொடைவலியால் வையத்தை ஆண்டு கொண்டு தொழுதேத்தும் முடியரசன் ஆனான் கண்டீர்! நடையழகு விளங்குகவி யரசன் பாட்டு நாடாண்ட பேரரசை நடுங்க வைத்த படைவரிசை; அப்படையால் உரிமை வேட்கை பாருக்கு நல்கியவன் வீரன் அன்றோ?(5) பாட்டு மறவன் இருளடைந்த கண்களுக்கும் ஒளியை யூட்டி இடிகின்ற நெஞ்சத்தில் உறுதி ஏற்றி
*தொடைவலி - பாட்டு வல்லமை |