பக்கம் எண் :

கவியரங்கில் முடியரசன் 87

மருளடைந்த மதியினர்க்குத் தெளிவு கூட்டி
    *மடிபடிந்த தேகத்தில் வீரம் மூட்டிச்

சுருள்நரம்பில் முறுக்கேற்றிக் குருதி தன்னில்
    சூடேற்றித் தோளுக்கு வன்மை ஏற்றி

அருள்கின்ற பாடலெலாம் ஆக்கித் தந்தோன்
    ‘ஆர்ப்பாட்டப் போர்ப்பாட்டு’ மறவன் அன்றோ?(6)

மன்னர் கோலம்

எழில்முகத்தில் சுருள்மீசை வீரங் காட்டும்;
    இருவிழிகள் கனல்கக்கி ஏற்றங் காட்டும்;

தொழில்கவிதை யானாலும் மக்கட் குற்ற
    துயர்நீக்கும் செங்கோலாய்க் கைக்கோல் காட்டும்;

விழியுயர்த்த இருபுருவம் வில்லாய்த் தோன்றும்;
    வெண்மைதரு தலைப்பாகை மகுடங் காட்டும்;

பழிதவிர்த்த பாடலெலாம் படைகள் காட்டும்;
    பகைநடுக்கும் பேச்செல்லாம் முரசங் காட்டும்;(7)

அவன் ஆணை

வலியற்ற தோளுடைய மாந்தர் தம்மை
    வகைகெட்டுக் கிலிபிடித்த நெஞ்சர் தம்மை

நலிவுற்றுத் துயர்மிஞ்சச் சாதி நூறு
    நவில்கின்ற கொடுமனத்துச் சழக்கர் தம்மைப்

பொலிவுற்ற வீட்டுமொழி கல்லார் தம்மைப்
    பொய்ம்மொழிகள் உரைப்பவரைப் போபோ என்று

புலியேற்றைப் போல்மொழிந்து வீரங் காட்டிப்
    புத்துலகை வாவாஎன் றழைக்கும் வேந்தன்(8)

படைத்தலைவன்

வணிகத்தின் பெயராலே உள்நு ழைந்து
    வளஞ்சுரண்டி வாழ்வுயர்ந்து மக்கள் தம்மைப்


*மடிபடிந்த - சோம்பல் மிகுந்த