பக்கம் எண் :

92கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3

14. முயல்வோம் வெல்வோம்

எண்சீர் விருத்தம்

செந்தமிழ்க்கோர் உயிர்நிலையாம் குறளைத் தந்த
    செந்நாவன் புகழ்பாடக் *குழுமி யிங்கு

வந்திருக்கும் பாவலரே! குறையாச் செல்வ
    வளந்தழைத்த அருள்பழுத்த தேவ கோட்டை

தந்திருக்கும் பெருமக்காள்! ஈர நெஞ்சத்
    தாய்க்குலத்தீர்! வள்ளுவர்க்குத் திருநாள் செய்ய

முந்திஎழும் ஆர்வத்தீர்! உங்கட் கெல்லாம்
    முழுமனத்தால் வாழ்த்துரைத்து நன்றி சொல்வேன்(1)

செட்டிநாடு

பழமைபெறு முக்கனிபோல் இனிக்கும் எங்கள்
    பைந்தமிழின் இசைவளத்தை, வஞ்ச நெஞ்சம்

குழுமியொரு கூட்டமைத்து மறைத்து விட்டுக்
    கொடுமைசெயக் கண்டிருந்தும் தாளம் போட்டோம்;

முழுமதியைக் கருமுகில்கள் சூழ்ந்து வந்து
    முகமறைத்த பொழுதத்துச் சிதறி ஓட

எழுவளி**போல் பகைவிரட்டித் தமிழ்மொ ழிக்கே
    இசைவளர்த்துப் பெருமைகொண்ட திந்த நாடே(2)

அறியாமை இருளகற்றி மக்கள் நெஞ்சில்
    அறிவொளியைச், சிந்திக்கும் ஆற்றல் தன்னைக்


*குழுமி - கூடி, **வளி - காற்று